சுமைகளை
சுகமாக
சுமந்து
உயிர்களின்
உற்றுகண்ணாய்....
இன்னுயிர்களை
தன்னுயிராய்
போற்றிப்
பேணி
இவ்வுலகை
உருவாக்கினாய்....
தன்னலம்
கருத
தங்கையாய்
அன்னையாய்
அன்பின்
அரவணைப்பாய்....
என்றென்றும்
மெழுகுவர்த்தி
நீ
பெண்ணே நீ...
என் பெருமையும் நீ
அன்பாய் நீ
என் அருமையும் நீ
வித்தையும் நீ
என் விடியலும் நீ
நிழலும் நீ
என் நிகரே நீ
வாழ்க்கை நீ
என் வழித்துணை நீ
ஆன்மா நீ
என் அடையாளம் நீ
தேற்றல் நீ
என் தேடல் நீ
நித்தமும் நீ
என் நித்திரையும் நீ...