Monday, October 11, 2021

நினைவுகள்

என் 
மன 
ஓடத்தில்
பயணம் 
செய்யும்
உன்
நினைவுகளுக்கு..
என்றும் 
எல்லை 
இல்லை...

Thursday, July 29, 2021

சிவராத்திரி

உன் 
நினைகளில்
மூழ்கிவிட்டதால்
ஒவ்வொரு
இரவும் 
சிவராத்திரி 
தான்

Sunday, July 25, 2021

ஓவியம்

வியந்துதான் 
போகிறேன்
நீ 
விழிகளில்
வரையும்
ஓவியங்களில்....

Thursday, July 22, 2021

பார்வை

என் 
மொத்த 
காதலும்
நிரம்பி 
தளும்பும்
உன்
ஒற்றை
பார்வையில்....

Tuesday, July 20, 2021

தொடர்தல்

உன்
வழியில்
தொடர்ந்து
தொலைதலும்
சுகமான
சுமையே....

Friday, July 16, 2021

உயிர்ப்பு

நீ 
என்ற
நினைப்பே
எனை
நித்தமும்
உயிர்ப்புடன்
வைக்கிறது....

Thursday, July 15, 2021

தனிமை

என் 
தனிமை 
என்பது
என்னுடன்
யாருமில்லை
என்பதல்ல
நீயில்லை
என்பதே...

Wednesday, July 14, 2021

நொடி

நகரும்
நொடிகளில்
நகராமல்
நீ
மட்டும்
என்னுள்....

Sunday, June 6, 2021

Tuesday, May 4, 2021

குவியல்

இதயத்தை
இருட்டிக்கும்
அவள்
சிரிப்பு...

விண்மீனை
விரட்டியடிக்கும்
அவள்
கண்கள்...

அவள்
என்
நினைவு
குவியலாய்
என்றென்றும்.....

நேசிக்கும் அவள்

உன் 
இதழோரப்
புன்னகை
என்
இறுமாப்பு
இதயத்தை
தொலைக்கட்டும்....

எல்லையில்லா
அவள்
அழகை
ரசிக்கத்தான்
ஒன்னோர்
ஜென்மம்
வேண்டும்....

அவள்
சிமிட்டும்
கண்ணசைவில்
இதயம்
இருமடங்காய்
துடிப்பதேன்...

என்
உயிரின்
ஊசலாட்டம்
அவள்
மூக்கின்
மோகனத்தில்
இருக்கிரதோ......

Friday, April 23, 2021

புத்தக நாள்

இளமையின்
இனிமையை
சித்திரங்களின்
சிந்தையின்
காமிக்ஸ்
காதல்.....

வயதில்
கல்கியின்
கல்வெட்டில்
காவியக்
காதல்....

பருவம்
முத்து
முதல்
தபூசங்கர்
வரை
கவியரின்
கற்பனை
மேல்
காதல்....

முப்பதின்
மூப்பில்
மனிதத்தை
கொண்டாடும்
கருத்தில்
காதல்....

பேசும்
பொழுதுகள்
பல
நேரம்
நல்ல
புத்தகங்கள்
பற்றியே.....

விடிந்ததும்
படித்த
புத்தகங்கள்
பல உண்டு....

என் காதலுக்கு
களவாண்ட
கவிஞர்கள்
ஏராளம்....

Saturday, March 6, 2021

பெண்

காலம்
கடந்தும்
காற்று
உள்ளவரை
பார்
புகழும்
பெண்களுக்கும்....


காப்பியம்
முதல்
கம்ப்யூட்டர்
வரை
எங்கும்
தடம்
பதிக்கும்
உலகில்
வீரநடை
போடும்
மங்கைகளுக்கும்...

மாதவரின்றி
இந்த
மானுடம்
இல்லை.. 
என்ற
உண்மை
உரைத்தவர்களுக்கும்....






Wednesday, January 13, 2021

பொங்கல் 2021

அன்பு அறிவு
ஆற்றல்
இன்பம் இனிமை
ஈகை
உண்மை
ஊக்கம்
எளிமை
ஏற்றம்
ஐக்கியம்
ஒற்றுமை
ஓதுதல்
ஔடதம்
பொருகி 
இந்நாளில்
செல்வமும்
செழிப்பும்
நிறைந்திட .....
பொங்கல்
வாழ்த்துக்கள்....

வீ.சு.சரவணமணி
பொதுப்பணித்துறை 
ஈரோடு
9842766788