Saturday, April 28, 2018

வலிகள்

வலிகளும்
வடுகளும்
மறையாது
கண்மணியே...

மரணம்
வரை
பயணிக்கும்
உன்
நினைவுகளும்
நித்திரையில்லா
இரவுகளும்
அதற்கு
சாட்சி

Tuesday, April 24, 2018

மன்னிப்பு

காத்திருப்பின்
அவசியம்
புரியும்...
எனக்கு...
உன்
ஒற்றை
மன்னிப்பிற்கு
ஓராயிரம்
ஆண்டு
காத்திருப்பேன்...

தண்டனைகள் இனிது

மறந்திருப்பேன்
என்று
நினைத்திருப்பாய்
நீ
என்
மரபணுவில்
கலந்துவிட்டாய்....
காலம்
கடந்தும்
என்னுள்
கரைந்திருப்பாய்....

என்
தோழியே
என்னை
ஏற்றுக்கொள்...

என்
ஒவ்வொரு
விடியலும்
உன்
நினைவுகளின்
நிசப்தத்தில்
தொடங்குகிறது....

ஏக்கத்தின்
எழவாயில்
நானும்
இன்று...

என்
உன்னதங்களில்
ஒன்றானது
உன்
தூய
நட்பு...

தவறுகள்
எனதானது
தண்டணைகள்
உனதானது....

என்
ஆயுள்
கடந்தும்
உன்
தண்டணைக்கு
காத்திருக்கிறேன்
என்னை
தண்டித்து
ஏற்றுகொள்...

Monday, April 23, 2018

பிரேமம்

உன்னோடு
இருந்தகாலங்கள்...

உன்
சுவாசம்
எனக்குள்ளும்
என்
சுவாசம்
உனக்குள்ளும்
மாற்றி க்கொண்ட
பருவமது...

பலநேர
பொழுதுகள்
உன்
பார்வைவீணைகளின்
இசையிலே
கடந்து
போயின....

மதிய
உணவில்
உன்
மகத்துவத்தை
உணர்ந்தவள்
நீ...

சில நேர
இடைவெளியை
தாங்காத
என் மனசு...
உன்னை
எப்படி
விட்டுக்கொடுத்தேன்
என
தெரியவில்லை...
என்
மரணம்
கூட
என்னை
மன்னிக்காது...

நட்பின்
உன்னதத்தை
ஒவ்வொரு
நொடியிலும்
காட்டியவள்
நீ...

கார்பன்காப்பி
கொண்டு
என்னை
படிப்பித்தவள்
நீ..

என்
காதலை
காட்டிக்கொடுத்த
கொச்சினே
வாழ்க..

என்
தாயாக
தோழியாக
ஏன்
என்னை
மதிக்கத்தக்கவனாக
மாற்றியவள்
நீ..

என்
இறுமாப்பு
இதயத்தில்
உன்னையேன்றி
யாருமில்லை...

என்
வறுமையை
உன் பலநேர
பாக்கெட்
மணிகள்
அடைத்திருக்கிறது...

என்
ஒவ்வொரு
அணுவிலும்
ஒழிந்து கொண்டு
பல்கி
பெருகி
விட்டாய்...

என்
மொத்தமும்
நீயாகி
விட்டாய்
இருந்துவிட்டுப்
போ
நான்
இருக்கும்வரையிலும்....

உன்னைப்
பிரிந்ததும்தான்
புரிந்து கொண்டேன்
என்னை
உனக்குள்
தொலைத்ததை....

என்
ஆயுளின்
கடைசிஆசையே
உன்னிடம்
மன்னிப்பு
கோருவது.  

கூனிக்குறுகி
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
அகம்
புறம்
என்றனைத்திலும்
இருந்தவள்...
இன்று
என்
அகத்தில்மட்டும்
ஆணியடித்து
என்னை
ஆட்கொண்டு
விட்டாள்....

என்
வெறுமையின்
வெற்றிடங்களை
உன்
நினைவுகொண்டு
நிரப்பிக்கொண்டிருக்கிறேன்...

உன்
நினைவுக்குவியல்
நான்....

Saturday, April 14, 2018

மானுடம்

என்
உடன்பிறப்புகளே...
உங்களை
மனிதரேன்றும்
புனிதரேன்றும்
நினைத்திருந்தேன்...
ஆனால்
நீங்களோ...
உங்களை
சாதி, மதமெனும்
போர்வைக்குள்
ஒழிந்து கொண்டு
உங்கள்
மனிதத்தை
தொலைத்தீர்கள்...