Tuesday, August 12, 2025

போதை

நல்அன்பை 
கெடுக்கும் 
போதை 
எதற்கு...

நற்பண்பை 
பறிக்கும் 
போதை 
எதற்கு...

நம் 
குடும்பத்தை 
குலைக்கும்
போதை 
எதற்கு...

மனிதத்தை 
மறக்கும் 
போதை 
எதற்கு...

மனதை 
மயக்கும் 
போதை 
எதற்கு...

மரணத்தை 
மலர்விக்கும்
போதை 
எதற்கு...

அறிவியலில் 
அகிலத்தை 
ஆட்டிப்படைக்கும் 
மனிதா 
உனக்கு 
ஏன் 
இந்த 
போதை...

போதை 
கொள்
உன் 
படிப்பிலும் 
அறிவிலும்....

போதையை 
மறந்து 
உன் 
பாதையை 
வலுப்படுத்து
வெற்றி 
நிச்சயம் 
உனக்கே....