Friday, January 24, 2020

தொலைவு

உன்
அருகாமையை 
எந்நேரமும் 
விரும்பிக்
கொண்டிருப்பதால்
உன்
விலகலைத்
தாங்கிக்
கொள்ள 
முடிவதில்லை....!!

Thursday, January 16, 2020

சுவாசம்

சுவாசம்
இல்லாமல்
நான்....
நேசிக்க
நீ
இல்லாமல்

முடிவிலி

இமைமூடா
முடிவிலியாய்
நான் 
என்
கருவிழி
நீ
என்பதால்

சுவாசம்

சுவாசம்
இல்லாமல்
நானும்
சுவாசிக்க
நீ
இல்லாமல்

Wednesday, January 15, 2020

வினையூக்கி

உன்
கண்களை
காணும்
போதெல்லாம்
இதயம்
ஒன்று
தன்
துடிப்பை
மறக்கிறது...
இல்லை
கட்டுகடங்காமல்
துடிக்கிறது....
இத்தனை
வினைவேகம்
என்னுள்
நீ
வினையூக்கி....

Saturday, January 11, 2020

ஒளிர்தல்

ஒளிர்தல்
இயற்கை
ஆனால்
என்னுள்
நீயும்
உன்னுள்
நானும்
ஏனோ....

புத்தகம்

என்
முன்னுரையும்
முடிவுரையும்
நீதானடி....
நான்
பார்க்காத
பக்கங்களை
என்னுள்
ஒழிந்து
கொண்டு
படித்துக்
கொண்டிருக்கிறாய்....

Tuesday, January 7, 2020

நினைவுகள்

இதயத்தின்
காதல்
கதையிது...
களவாடிய
நினைவுகள்
எப்போதும்
என்னுள்...
நீயின்றி
உன்
நினைவுகள்
என்னை
தாலாட்டும்
என்ற
நம்பிக்கையில்....

புதிர்

விடை
தேடும்
விடுகதைகள்...
எனோதங்கள்
ஏராளம்....
முரண்பாடுகள்
தாராளம்....
மனங்களின்
தூரம்
துருவங்களை
தோற்கடிக்கும்....

இன்னும்
மனம்
உன்
பின்னால்....

ஏனென்று
புரியவில்லை
உன்னை
புரியாமல்
இருப்பதுதான்
இப்புதிரா?....

அவள்
அப்படி
ஒரு
அழகியா.....

ஆம்
உள்ளத்தில்...
எப்படி....
ஆம்
என்னையே
பிடித்திருக்கிறது.....

எனக்கு
அவளைப்
பிடிப்பதில்
என்ன
ஆச்சரியம்....
அவள்
என்னளவில்
பேரழகிதான்....

மூச்சு

அவள்
இல்லாத
பொழுதுகள்....
நான்
நிலையில்லாமல்
இருக்கிறேனாம்....
ஆம்
உண்மையை
உறக்கச்
சொல்கிறேன்
அவள்
என்
மூச்சுக்காற்று....

சுமை

சுகமான
சுமைதான்
அவள்...
இதயம்
வலிக்கும்
அளவிற்கு
என்
உள்ளே
இருக்கிறாள்.....

Monday, January 6, 2020

அதிகாலை

அதிகாலை
வந்தால்
உன்
முகம்
சூரியனாய்
போல்
பிரகசமாய்
தினமும்
என்னுள்.....

ஏக்கம்

உன்
தோளோடு
தோள்
சேர்த்து...
உன்
விழி
வழியே
எனைப் 
பார்த்து....
உன்
மடிமீது
நான்
உறங்கும் 
நாள்
வருமோ
என்று
ஏக்கத்தில்
ஏங்கி
தவிக்கிறேன்
நீயின்றி....

சாபம்

கோபம்
இருந்தால்
திட்டி
விடு....
உன்
மௌனத்தை
சாவியாக்கி
என்னை
சாகடித்து
விடாதே....
நொடிகள்
யுகங்களாக
மாறி
என்னை
கொல்லாமல்
கொல்கிறது...
உலகில்
உண்மையில்
கொடிது
உன்னை
தனித்திருப்பது...
நரகத்தின்
விளிம்பில்
என்
நாழிகை
இப்போது.....
கழியும்
பொழுதுகள்
உன்
வரவை
எண்ணி.....
நகர
மறுக்கும்
உன்
நினைவுகளால்
நடைபிணமாய்
நானும்
இன்று....

Sunday, January 5, 2020

காலன்

ஒருசேர 
கொள்கிறது
உன்
நினைவுகள்
என்னை 
அனுதினமும்.......
நீங்காத
உன்
நினைவுகள்
நித்தமும்
நித்திரையின்
காலனாய்.....

முயற்சி

முயற்சிக்கிறேன்
இன்றளவும்
என்
பார்வையில்
பட்ட
உன்
பேரழைகை
வார்த்தைகளில்...
எம்மொழியில்
உன்னை
வர்ணிக்க
தமிழே
அன்றி
சிறந்ததெது...

தனிமை

உன்
அழைப்பிற்காக
காத்திருந்து....
உறங்காமல்
போன
இரவுகளை
எண்ணி
நானும்
தனிமையில்...

புரிதல்

பிணைப்பு 
என்பது 
புரிதலின் 
மறுஉருவம்....

Saturday, January 4, 2020

சுவாசம்

காற்றும்
என்
காதலை
உனக்கு
கடத்தும்
என்ற
நம்பிக்கையில்
என்
சுவாசம்

வரம்

வாழ்தல்
வரமாய்
நீ
என்
அருகில்....

காதல்

காதல்
இருட்டறை
விளையாட்டா....
மனங்களின்
கலத்தலா....
வேதியியல்
வினைவேகமா...
 உயிரியல்
உறவாடலா
விடை
தேடி
தேடி
தொலைந்தேன்
உன்னுள்
நான்

Friday, January 3, 2020

தனிமை

தனிமையில்
நானும்...
நீளும்
இரவுகள்
நீ
இல்லாமல்....

வறுமையை
விட
கொடுமை
தனிமை ..

வாடை
வாடகையில்
என்னை
வதைக்க....
தல்லாடும்
இளமை
உன்னை
தாலாட்டும்.....

உன்
பார்வை
மழையாய்
விழும்போதும்
எனக்குள்
ஏனோ
அத்தனை
தாகம்....

எதை
எதையோ
தேடிக்கொண்டிருக்கும்
நான்
இப்போது
என்னையே
உன்னில்
தேடிக்
கொண்டிருக்கிறேன்....

நகரும்
ஒவ்வொரு
நாளும்
உனக்காகத்
தான்
போலும்....
நொடிக்கு
நொடி
வந்து
செல்கிறாய்....

நகரும்
ஒவ்வொரு
நாளும்
என்னுள்
நகராமல்
உன்
நினைவும்....

Thursday, January 2, 2020

இதயத்தின் 
வலி
இன்னுமா
கேட்கவில்லை
உனக்கு
மௌனமே
பதிலாய்
அதிலும்...

இடைவிட
உன்
உரசல்களில்
என்
உயிரை
உருவிச்
சென்றாயோ

நீயில்லாத்
தனிமை
என்னை
தீக்குளிக்க
வைக்குதடி...

தனிமையின்
வெறுமையில்
நானும்....

இதயத்தின்
சுவர்கள்
எல்லாம்
என்
முத்தத்தால்
தீக்கரை
போனதென்ன

திக்கமுக்காடி
போகின்றேன்
உன்
முச்சால்
என்னை
எழுப்பு

உன்
பெண்மையின்
பேரன்பை
பரிசலிக்க
மாட்டாயே...
என்னுயிரே

ஏன்
இந்த
பிறப்பு
உனக்குதான்
என்பதுபோல்
விநாடிக்கு
கோடிமுறை
உரைப்பதுதான்
உன்
விந்தை

விடியல் தான்
விடிகிறது
நீ
மட்டும்
அப்படியே
என்னுள்

காலை
வந்தால்
மாலை
வரும்
மாலை
வந்தால்
மதி
மயங்கும்
நீ
என்ன
மதிவதனியா
எண்ணங்கள்
வண்ணங்கள்
என்றென்றும்
நீயாக.....

வார்த்தைகள்
உன்னிடம்
மட்டும்
ஏனோ
பஞ்சத்தில்
இதயம்
சேர்த்தவைகள்....

இதயம்
சேர்த்த
நினைவுகள்
உன்னோடு
மட்டும்....

உன்னோடு 
வாழும்
வாழ்வை 
எதிர்நோக்கி
நானும்....

நீங்காத 
நினைவுகளை
சேர்த்து
சேர்த்து
தினமும்
நீங்காத
பேரலையாய்
நீயும்
என்னுள்....

அனுதினமும்
நீங்காமல்
நீயும்
என்னுள்
என்
செய்தாய்
என்னாவளே....
வரமா
சபமா
உன்வரவு..

வாழ்தல்
வெறும்
வார்த்தையில்லை
உன்னோடு....
காரணங்கள்....
காத்திருத்தல்....
காரணமின்றி...
காதலின்
சுவை....