Sunday, April 28, 2019

மொழி

என்

வார்த்தைகளின்

மொழி


மௌனம்

என்


இதயத்தின்


மொழி


கவிதை

Saturday, April 20, 2019

நினைவுகள்

நாளெல்லாம்
கண்மணியே
என்
கருவிழி
நிறைத்து
கண்சிமிட்டும்
உன்
நினைவுகள்...

இரவெல்லாம்
என்னுள்
சஞ்சரித்து
சல்லாபம்
இடுகிறது
தணிக்கையின்றி....

பயணம்


நிறுத்தம்
வந்ததும்
இறங்கி
விடுவார்கள்
பேருந்தை
அனாதையாக
விட்டு...

உணர்வு

உணர்வுகளின்
வடிகால்
கவிதை...
இந்த
உணர்ச்சியற்ற
ஊணிலிருந்து....

ரசிகன்

வெள்ளைச்
சிரிப்பில்
கொள்ளை
அழகாள்..
அவள்
இருவிழி
கொண்டு
என்
இதயத்தை
திருடினாள்...
அவள்
குறும்பு
பார்வையின்
ரசிகனாய்
நானும் ....
இன்றும்
என்றென்றும்.....

வேகம்

ஏய்
மஞ்சள்
அழகியே...
அப்படி
பார்க்காதே
என்
இதயத்தின்
இயக்கம்
இருமடங்காகிறது....

அவள்..

அவள்
ஒற்றை
விழியால்
என்
உயிரை
உழுக்கும்
வித்தை
தெரிந்தவள்...

Friday, April 19, 2019

உரம்

என்
இதய
அறைகள்
ஒவ்வொன்றிலும்
உன்
உருவம்
ஒளிந்திருந்து
என்
உயிரை
உரமேற்றுகிறது....

கடத்தல்

போகும்
வழியேல்லாம்
கடந்து
போகிறாய்
காற்றைப்
போல்
நீயும்
உன்
நினைவுகளும்...

Thursday, April 18, 2019

விடியல்

நான்
தொலைத்த
ஒவ்வொரு
இரவுகளும்
விடியலில்
உன்
பெயரை
உச்சரித்து
உதயமாகிறது....

ஹைக்கூ

தேனின்சுவை
உன்
முத்ததிற்குப்பிறகு

Sunday, April 7, 2019

நினைவுகள்...

நினைவுகள்தான் டீ
வாழ்க்கை
நீயும்
உன்
நினைவுகளும்
போது
இந்த
ஜென்மம்
தீர...