Friday, January 12, 2024

நினைவுகள்

உன்
நினைவுகளில்
கரையும்போது
காதலும்
அழகாய்தான்.... 

Saturday, September 23, 2023

யார்?

அவளைக்
கடந்து போவதும்
கடத்திப் போவதும்
அவ்வளவு
எளிதல்ல...

அவளிடம்
எப்படிச்
சொல்வது

காதல்...

அவளைக்
கடந்து 
போவதும்
கடத்திப் 
போவதும்
அவ்வளவு
எளிதல்ல...

அவளிடம்
எப்படிச்
சொல்வது

Monday, September 11, 2023

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்
வீ.சு.ச.அமிழ்தினி
6÷ஆம் வகுப்பு "ஏ" பிரிவு.

பள்ளிகள்
ஓர்
அறிவுக்கூடம்...

நம்
அறிவை
அகலமாக்கிய
அற்புதக்கோவில்...

பாசத்தை
பண்போடு
ஊட்டிய
அகல்விளக்கு...

நம்
பண்பாட்டை
பறைசாற்றும்
குட்டிதேசம்...

மனிதர்களை
மகான்களாக்கும்
அறிவுச்சாலை...

விட்டுக்கொடுக்க
கற்றுக்கொடுத்த
நட்பை
போதிக்கும்
போதிமரம்....

எண்ணையும்
எழுத்தையும்
எங்கள்
வாழ்வையும்
கற்றுத்தந்த
எங்கள்
பள்ளிக்கூடம்.

Sunday, September 10, 2023

தொலைவு

ஏதோ
தொலைத்ததுபோல்
மனநிலை....

திரும்பிப்
பார்த்தால் 
வெகு
தொலைவில் 
அவள்....

Monday, August 28, 2023

காதல்

காதல்
என்றால் 
என்னவென்றால்
நான் 
இல்லாத 
நாள்
அவளுக்கு...

சிந்தனை

சிந்தனை 
நெருக்கடியில் 
திணறிக் 
கொண்டிருக்கும்
அவள்
நினைவுகளை
எழுத்துக்களால்
இறக்கி 
வைக்கலாம் 
என்று 
பார்த்தால் 
இறங்க 
மறுக்கின்றது.