கண்ணே
கண்மணியே
கனியமுதே
குலவிளக்கே
குலம் காக்கும்
விடிவெள்ளியே...(குலமகளே)
உன்னை
சுமக்கையில்
தெரியவில்லை
நீ
ஆணா
பெண்ணா
என்று...
அன்பே
நான்
உறுதியாய்
இருந்தேன்
தேவதை
நீ
அவதரிப்பாய்
என்று...
அன்பெனும்
அமுதாய்
என்னுள்
ஆர்ப்பரித்தாய்
புது வெள்ளமாய்
புதுரத்தமாய்
பிறப்பேடுத்தாய்
எனக்குள்....
என்னை
உன்
வழிகாண
வாய்ப்பளித்தாய்...
உன்
தேகத்தை
அலங்கரிக்க
வானவில்லை
வளைத்திருந்தேன்...
விண்மீனும்
வெக்கட்பட்ட
காட்சிகள்தான்
ஏராளம்...
நிலவுக்குப்
பொறாமை
கண்மணியே
உன்னழகைக்கண்டு......
உன் மொழி என் மொழி
என் மொழி உன் மொழி
நம் மொழி
தமிழ் தானே
என் தாலாட்டும்
தமிழ் தானே...
தன்னை
மறந்து
உன்னைப்
போற்றும்
தகப்பனும்
நீ
அறிவாய்...
ஆனந்த
கண்ணீராய்
பொங்கிடும்
நீருற்றாய்
அன்பின்
அலப்பரிய
அப்பா
உன்
கையிடுக்கில்...
அண்ணன்
ஒரு
மந்திர சொல்
நீ
உச்சரிக்கும்
சத்ததில்
சாபங்கள்
விலகிவிடும்...
வலி யாவும்
நீங்கிவிடும்
உன்
அண்ணன்
உனக்கானவன்....
கொலுப்பூச்சிகள்
ஒலிக்க
குறுநடை
நடந்து
என்
நெஞ்சத்தை
வருடும்
என்
அன்னையே....
இயற்கையின்
இடைவிடா
நிகழ்ச்சிகளில்
உன்
வளர்ச்சி
பெரும்
வளர்ச்சி....
உள்ளங்கை
குழிவிருந்து
இறக்கிவிடு
எனத்துடித்த
விதைகள்
போல்
விரியமாய்
வளர்கிறாள்
என்
செல்லமகள்....
பேதை
நீ
இன்று
பெதும்பையானாய்...
நன்நாளாய்
வந்தது
உன்
எழுதிங்கள்
சீராட்டு....
உற்றார்
உறவினர்
சொந்தங்கள்
புடைசூழ
குறித்த
நன்னாளில்...
சந்திரன்
தலைதூக்கும்
மாலை
மதிநேரம்
நம்
அருமைக்காரர்
முகூர்த்தக்கால்
நட்டுவைத்தே
இந்த
எழுதிங்கள்
வைபோகம்
அரங்கேற்றம்
ஆரம்பம்....
கற்பு குலையா
வேற்ற குலையா
காப்பு குலையா
வம்சம்
ஆல்போல்
தழைத்து
அருகுபோல்
வேறுன்றி....
பட்டிமரவு
எலந்த மரம்
குடைமரவு
நுகம்
கொலவு
குழவிலிங்கம்
உரல்லிங்கம்
அம்மி
நிறைக்குடம்
பொடைச்சட்டி
வானைச்சட்டி
உடனாய்
உன்
அண்ணன்
தம்பிகளை
அழைத்து
என்
தாய்வீட்டில்
கண்மணி
உனக்கு
புதுமணி
நீ
உடுத்த
விரத விருந்து
வைத்து....
புதுப்பானை
போற்றியேடுத்து
என்
வம்ச
எழுதிங்கள்காரிகள்
ஏழு கிணற்றுநீரேடுத்து
கங்கணம் கட்டி
மூன்று முறை
அரிசிபோட்டு
கணபதி
பூசை செய்து..
வாசல்
தொளித்து
வண்ணக்
கோலமிட்டு
செம்மண்
கரைகட்டி
பூமகளே
உனக்கு
வெற்றிலை
பாக்கு வைத்து...
ஐந்துபடி
திணை
மாவில்
நீர்விட்டு
நன்குறுட்டி
இருகூராக்கி
இடையே
அச்சுவெல்லமிட்டு
மாவால் மூடி
அரச இலையிட்டு
உன்
அண்ணன்
பொடைசட்டி
எடுத்து
அடுப்பில்
கோதைமாவை
வேகவிட...
குமரி உன்னை
மர உரல்
முன்னிறுத்தி
உன்
அண்ணன்
எலந்தமுள்
குடை பிடிக்க
நாவிதன்
கொழுமுளை காய்ச்சி
கனியமுதே
வெண்மணியே
உன்முன்
வைத்து
சுடச்சுட
மோர்விட
மங்களமே
மணிமேகலையே
உன்
மணிக்காலால்
உரலை
உதைத்து
உள்
வந்தாய்.....
நங்கை
கொழுந்தியாள்
என
நால்வரும்
புடைசூழ
குழவிகல்
எடுத்து
உன்
மடியிலிட்டு
ஆக்கைக்கு
நீருற்றி
பட்டிமாவு
பந்தலில்
விரதம்
முடித்து
விருந்து
வைத்தோம்...
விருந்தோம்பல்
விடைபெற்று
அதிகாலை
அடி எடுக்க...
அருமைக்கு
நீயிருக்க
அருமைக்காரி
உடனிருக்க...
வீட்டுவாசல்
நிலவுமேல்
பேழை
கூடையில்
வைத்திருந்த
கோதைமாவை
கோடாரி
துணை
கொண்டு
இரு கூறாய்
பிளந்தாய்
நீயும்...
மா நடுவில்
செங்கல்லாய்
இருமாப்பாய்
நீ
வைத்த
வெல்லமும்
கரையாமல்
உன்
கற்புக்கு
களங்கரையாய்
வேளிர்
குலம்
காத்தாய்
என்
குலமகளே....
சீர்காரி
நீ
சமைத்து
நம்
சொந்தங்கள்
சுவையாற
எழுதிங்கள்
முடிந்தது
சீரும்
சிறப்பாய்....
No comments:
Post a Comment