உயிர்வரை
இருக்கும்
உறவுக்கு
என்
உதிரத்தால்
வரையும்
மடல்
என்
இதயம்
சுமந்த
சுகமான
சுமை
நீ...
சுமையென
இரக்கவும்
முடியவில்லை
சுகமென
சுமக்கவும்
முடியவில்லை...
அறிவியலின்
மாயம்
போல்
இரண்டற கலத்தலில்
கை
தேர்ந்தவள்
நீ...
என்
இனிமைக்கு
சொந்தக்காரி
நீ
உன்
அழுகையின்
அம்சமாய்
நானும்
என்
காதலுக்கு
காமத்திற்கு
நீ
மட்டும்
இவ்வுலகில்
உன்
கற்பிதலில்
கரையும்
கயவன்
நான்...
காதலுக்கும்
சாதலுக்கும்
நடுவே
நான்..
இன்றளவும்
நீ
மட்டும்
என்
நெஞ்சில்
இயலாமை
வெளிப்படும்
வேகத்தில்
நீயும்
வெடித்து
விடுவாய்
என
ஐய்யத்தில்
சற்றே
தள்ளித்தான்
போகின்றேன்
உனக்கு
காலமுண்டு
அறிவாய்
தெளிவாய்
வாழ்வாங்கு
வாழ்ந்து விடு...
ஜென்மத்தில்
வழியில்லை
என்
வாழ்க்கையே
பல்லாண்டு
வாழ்திரு
கழித்திட்ட
காலமெல்லாம்
அழிவில்லா
அழகியலாய்
இதயம்
தொட்ட
நினைவுகளாய்
அசைந்தாடும்
ஆங்காங்கே
நிழற்படமாய்
நெஞ்சோடு
நிழற்படங்கள்
உணர்ந்தும்
வண்ணங்கள்
வாழ்க்கையில்லை
என் அன்பே
ஆயிரே...
நிஜம்
அது
உணர்த்தும்
நிகழ்காலம்
நிதர்சனம்...
என்
கவிஞன்யாய்
ஆக்கிவிட்ட
காரிகையே
கைமாறு
என்
செய்யேன்
உன்னை
பாக்காமல்
நான்
படும்
பாட்டை
என்
'பா'க்களால்
உனக்கு
உணர்ந்தும்
காலமிது
உன்
வருகையின்
வசந்தம்
எனதாகட்டும்
No comments:
Post a Comment